Tuesday, April 24, 2007

மனு

http://tsivaram.blogspot.com/2007/04/blog-post_24.html

சிவா, லொடுக்கு, வ‌ல்லி, கொத்த‌னார், அறியாத‌வ‌ன், ஜி, கீதா, பொன்ஸ், க‌விதா, இம்சை அர‌சி, க‌திர், vsk, ச‌ந்தோஷ், மை ப்ர‌ண்ட், சியாம், அருண், உங்க‌ள் கேள்வி/க‌ம‌ண்ட்ஸ்க்கு ம‌னுவை எழுதிய‌வ‌ன் என்ற‌ முறையில் என்னோட‌ ப‌தில்:

ஐ.நா மொழிகள் பற்றிய உங்கள் கருத்து உண்மையே. ஐ.நா‍ வின் ஆட்சி மொழியாக இந்தி பயண்ப்படுத்தப்படுவது குறைவாகவே இருக்கும்.
ஆனால், இது ஆட்சி மொழி என்ற நிலையை மட்டும் எதிர்த்து கொண்டுவரப்பட்ட மனு அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
http://vetri-vel.blogspot.com/2006/12/india-does-not-have-national-language.

இந்தியாவில் முத‌லில் த‌மிழ் ம‌ற்றும் பிற‌ மொழிக‌ளுக்கும், இந்திக்கு அளிக்க‌ப்படும் அதே அளவு $$$ அளிக்க‌ப்பட‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து.

ச‌ரி, அப்போ அதை எதிர்த்து ம‌னுப் போட‌ வேண்டிய‌து தானே, ஏன் ஐ.நா மொழியாக‌ இந்தி உய‌ர்வ‌தை எதிர்த்து ம‌னு என்ற‌ கேள்வி வ‌ரும்.

1) ஐ.நா வின் ஆட்சி மொழியாக‌ இந்தி மாறினால், இந்தியா என்றால் இந்தி, இந்தி என்றால் இந்தியா என்ற நிலமை உலகத்தில் உருவாகும்.

2)இப்போதே, தமிழுக்கு இந்தியாவில் என்ன‌ நில‌மை என்று இதில் விள‌க்கியுள்ளேன்.
http://vetri-vel.blogspot.com/2006/12/tamil-vs-sanskrit-discrimination-aட்.html http://vetri-vel.blogspot.com/2007/03/tamil-tn-high-court-language.html

3) 1965 ல், இந்தியா முழுவ‌தும், ஆங்கில‌த்தை அக‌ற்றி விட்டு இந்தியை கொண்டு வர வேண்டும் என்று கூறிய‌வ‌ர்க‌ள், இந்தி ஐ.நா வின் ஆட்சி மொழி என்ற‌ நிலை வ‌ந்த‌ப்பின், இந்தியா முழுவ‌தும் இந்தி அவ‌சிய‌மாக‌ க‌ற்ப்பிக்க‌ வேண்டும் என்று கூறுவார்க‌ள்.http://vetri-vel.blogspot.com/2006/12/articles-on-1965-hindi-imposition.html

4) உல‌க‌ நாடுக‌ளில் ந‌டக்க‌ கூடிய‌ மொழி மற்றும் மொழி சார்ந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளில், இந்திக்கு ம‌ட்டுமே முக்கிய‌த்துவ‌ம் இருக்கும். அத‌ற்க்கு கிடைக்க‌ கூடிய‌ $$$, உல‌க‌ அர‌ங்கில பெய‌ர் பிற‌ மொழிக‌ளுக்கு கிடைக்காது. சரி, கிடைத்தால் என்ன என்று என்னுபவர்கள், இதனை மனதில் கொள்ள வேண்டும்:

ஐ.நா என்ப‌து, "நாடுக‌ளின் கூட்ட‌மைப்பு". இதில், இந்திய அர‌சு சொல்லும் மொழிதான் ஆட்சி மொழியாக‌ வாய்ப்பு உண்டு. த‌மிழக‌ அர‌சு சொல்லும் மொழி ஆட்சி மொழி ஆக வாய்ப்பே இல்லை. த‌மிழ‌க‌ அரசு தமிழுக்காக குறள்க் கொடுத்தாலும், மத்திய அரசு அதை ஆதரிக்காது. அப்படி ஆதரித்தால் பிற மொழிகளும் தமிழுக்கு இனையான நிலயை கேட்கும் என்று காரணம் சொல்லும். மத்திய அரசு தமிழ் மொழியை ஆதரிக்காதப் போது, ஐ.நா வில், தமிழ் மொழி இடம் பெற வாய்ப்பே இல்லை. போட்டியில் தோற்றால் பிரச்சனை இல்லை, ஆனால் போட்டியில் பங்கு பெறவே இந்திய அரசு தடையாக இருக்கும் போது, எப்படி அது நியாயமான போட்டி ஆகும் ???


எப்படி, இந்திக்கு இவ்வளவு மவுசு இந்தியாவில் ?இத‌ற்க்கும் கார‌ண‌ம் உண்டு.இதைப் படிக்கவும்:http://vetri-vel.blogspot.com/2007_02_04_archive.html

Even in 1965, when the literacy rate was a paltry 24 % and when we were importing 2 shiploads of wheat/day to barely survive the govt spent 2.1 Million US dollars for hindi propagation. This was the time when shashtri gave the famous call for fellow Indians to skip one meal a day since we were short on food supplies - this is the best possible example of "forceful imposition / usurping common resources for the benefit of a single language"
To spread Hindi, the government is spending $2,100,000 this year. - this is in 1965 !!!http://www.time.com/time/magazine/article/0,9171,839158,00.html

இந்த‌ மாதிரி, ஒரு மொழிக்கு ம‌ட்டும் செல‌வு செய்வ‌தனால் தான் இந்த‌ நிலை. இது மாற‌ வேண்டும், பிற‌ மொழிக‌ளுக்கும் ம‌த்திய‌ அர‌சு $$$ செல‌வு செய்ய‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து.


நான், இந்த‌ மனுவை எழுதும் போது, மேலே கூறியவற்றை ம‌னதில் வைத்து கொண்டு எழுதினேன்.மொழி பிரச்சனை பற்றி மேலும் படிக்க இந்த பதிவு: http://vetri-vel.blogspot.com/


இந்தியாவில் முத‌லில் த‌மிழுக்கு ந‌ல்ல‌ நிலைக் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து என் க‌ருத்து. இப்போது, இந்தி ஐ.நா ஆட்சி மொழியாக‌ வ‌ருவ‌தை எதிர்ப்ப‌த‌ன் மூல‌ம், த‌மிழ்/த‌மிழர்க‌ளுக்கு உல‌க‌ள்வில்/இந்தியாவில் ஒரு குற‌ள்க் கிடைக்கும் என்பதும் என் ந‌ம்பிக்கை.

நான் ஏதாவ‌து கேள்விக்கு ப‌தில் அளிக்க‌வில்லை என்றால், திரும்ப‌ கேட்க‌வும். விறைவில் அத‌ற்கும் ப‌தில் அளிப்பேன்.

ந‌ன்றி.